தொழிற்சாலை உரிமம் புதுப்பிக்க அறிவிப்பு

ஈரோடு:ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் ச.அனிதா ரோஸ்லின்மேரி, செய்திக்குறிப்பில் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் பதிவு பெற்ற அனைத்து தொழிற்சாலைகள் வரும், 2027ம் ஆண்டுக்கான தொழிற்சாலைகளின் உரிமத்தை, dish.tn.gov.inல் வரும், 31க்குள் புதுப்பித்து, உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிமம் புதுப்பித்தல், இதர நடைமுறை இணைய மயமாக்கப்பட்டுள்ளதால், இணை இயக்குனர் அலுவலகத்துக்கு வர வேண்டியதில்லை.
வரும், 31க்கு பின் விண்ணப்பம் சமர்பிக்கும்போது, தாமத கட்டணம் செலுத்த வேண்டும். இணையத்தில் சமர்பித்து உரிமம் பதிவிறக்கம் செய்ய வேண்டி உள்ளதால், கடைசி நேர நெருக்கடி, இணைய வழி சிக்கலை தவிர்க்க முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement