கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் சிறப்பு கடன் மேளா

கிருஷ்ணராயபுரம்,:திருக்காம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடந்தது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். விவசாயிகளுக்கு பயிர் கடன், கால்நடை பாரமரிப்பு கடன், பொது நகை கடன், சுயஉதவிக்குழு கடன், சிங்க பெண்கள் சுய உதவிக்குழு கடன், மத்திய காலக்கடன், மாற்றுத்திறனாளிகளுக்கு கடன், தானிய ஈடுகடன், டாம்கோ கடன், டாப்செட்கோ கடன், தாட்கோ கடன், ஊரக தொழில் கடன், பண்ணைச்சாரா கடன், வீட்டுகடன், வீட்டு அடமானக்கடன், உள்பட, 14 வகையான கடன் வழங்குவதற்காக சிறப்பு கடன் மேளா நடத்தப்பட்டது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட, கிராம மக்கள் விண்ணப்பம் செய்து தேவைக்கு ஏற்ப கடன் வசதி பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் கலந்து கொண்டனர். கூட்டுறவு கடன் சங்க அலுவலர்கள் ரகுபதி, தமிழ்செல்வன், ஆதிஸ் ஆகியோர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement