இந்தியாவுக்கு மூன்று தங்கம்: காமன்வெல்த் பில்லியர்ட்ஸ், ஸ்னுாக்கரில்...
ஆமதாபாத்: காமன்வெல்த் கியூ ஸ்போர்ட்சில் இந்தியா 3 தங்கம் உட்பட 13 பதக்கம் வென்றது.
ஆமதாபாத்தில் காமன்வெல்த் கியூ ஸ்போர்ட்ஸ் (பில்லியர்ட்ஸ், ஸ்னுாக்கர்) சாம்பியன்ஷிப் நடந்தது. 40 நாடுகளில் இருந்து 144 பேர் பங்கேற்றனர்.
ஆண்களுக்கான ஸ்னுாக்கர் பைனலில் இந்தியாவின் ஆதித்ய ஸ்நேஹல், 3-0 என சக வீரர் த்வாஜ் ஹரியாவை வீழ்த்தி, தங்கம் கைப்பற்றினார்.
பெண்களுக்கான பில்லியர்ட்ஸ் பைனலில் இந்தியாவின் அனுபமா, 1-0 என சக வீராங்கனை உமாதேவியை சாய்த்து, தங்கம் தட்டிச் சென்றார். ஆண்களுக்கான பில்லியர்ட்சில் இந்தியாவின் ரயான் ராஸ்மி, சக வீரர் சித்தார்த் சைலேசை வீழ்த்தி, தங்கம் வென்றார்.
பெண்கள் அணிகளுக்கான ஸ்னுாக்கரில் கீர்த்தனா இடம் பெற்ற இந்திய அணி 0-3 என இங்கிலாந்திடம் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
பெண்களுக்கான பில்லியர்ட்சில் இந்தியாவின் உமாதேவி, பிரிட்டனின் ராபர்ட்டாவிடம் தோற்க, வெள்ளி கிடைத்தது.
ஒட்டுமொத்தமாக இந்திய அணி 3 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என 13 பதக்கம் கைப்பற்றி, பட்டியலில் முதலிடம் பிடித்தது.