மாயா ஜோடி சாம்பியன்
லாகோஸ்: ஐ.டி.எப்., டென்னிஸ் பெண்கள் இரட்டையரில் மாயா, கோட்லியர் ஜோடி சாம்பியன் ஆனது.
போர்ச்சுகலின் லாகோஸ் நகரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மாயா ரேவதி, இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற வீராங்கனை, நெதர்லாந்தின் பிரிட் டு பிரீயை சந்திக்க இருந்தார். மாறாக காயம் காரணமாக பிரிட் விலகிக் கொள்ள, மாயா பைனலுக்கு முன்னேறினார்.
பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் மாயா, உக்ரைனின் கோட்லியர் ஜோடி, இத்தாலியின் கார்லொட்டா, சீனாவின் மின் லியு ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 0-6 என இழந்த மாயா ஜோடி, அடுத்த செட்டை 6-2 என கைப்பற்றியது. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'சூப்பர் டை பிரேக்கரை' மாயா ஜோடி 10-7 என வென்றது.
ஒரு மணி நேரம், 11 நிமிடம் நடந்த போட்டி முடிவில் மாயா ஜோடி 2-6, 6-2, 10-7 என வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.
மேலும்
-
இயற்கை உரங்களின் பயன்பாட்டிற்காக வெளிமாநிலம் செல்லும் ஆட்டுப்புழுக்கை
-
தமிழ் தளத்தில் பட்டிமன்ற கடவுள் சாலமன் பாப்பையா: உயர்நீதிமன்ற நீதிபதி புகழாரம்
-
அக்.14ல் தபால் சேவை குறைதீர் முகாம்
-
தாலுகா ஆபீஸ் பஸ் ஸ்டாப் பொதுமக்களுக்கு அவசியம்
-
குழாய் உடைந்து 2 ஆண்டு குடிநீர் வீணாகும் அவலம்
-
பாலியஸ்டர் நுால் வியாபாரிகள் பிரத்யேக சங்கம் துவக்கம்