தமிழகம்-ராஜஸ்தான் மோதல்: இன்று ரஞ்சி கோப்பை ஆரம்பம்

ஜெய்ப்பூர்: ரஞ்சி கோப்பை தொடரில் இன்று தமிழக அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தானுடன் மோதுகிறது.
இந்தியாவின் முன்னணி முதல் தர கிரிக்கெட் தொடர் ரஞ்சி கோப்பை. இதன் 92வது சீசன் இன்று துவங்குகிறது. மொத்தம் 38 அணிகள் 'ஏ', 'பி', 'சி', 'டி', பிளேட் குரூப் என ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. நடப்பு சாம்பியன் ஜம்மு அண்டு காஷ்மீர் அணி, புதுச்சேரி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட அணிகளுடன் 'ஏ' பிரிவில் உள்ளது.
தமிழக அணி, மும்பை, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகளுடன் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. போட்டிகள் லீக் முறையில் நடக்கும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 பிரிவில் 'டாப்-2' இடம் பெறும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.
ஜெய்ப்பூரில் இன்று நடக்கும் 'டி' பிரிவு போட்டியில் தமிழகம், ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
தமிழக அணியில் வாஷிங்டன் சுந்தர், கர்நாடக அணியில் ராகுல், சவுராஷ்டிர அணியில் ஜடேஜா, மும்பை அணியில் ஜெய்ஸ்வால் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இந்த சீசன் முழுவதும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, பீஹார் அணிக்காக களமிறங்க உள்ளார்.

Advertisement