மக்காச்சோளம் செயல் விளக்க திடல் அமைக்க மானியம்

ராசிபுரம்:ராசிபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் தனலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ராசிபுரம் வட்டாரத்தில் மக்காச்சோளம் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கில், செயல்விளக்க திடல் அமைக்க, 2.50 ஏக்கருக்கு, 11,500 ரூபாய் மதிப்புள்ள இடுபொருட்கள் மானியமாக வழங்கப்படுகிறது.
இந்த தொகுப்பில், 2.50 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள், 15 கிலோ வீரிய ரக மக்காச்சோள விதை, 12.50 கிலோ நுண்ணுாட்டம், உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றை பெறலாம்.
மேலும், மக்காச்சோள பயிரை தாக்கும் படைப்புழுவை கட்டுப்படுத்தும் உயிர் எதிர் காரணியான மெட்டாரைசியம் அனிசோபிலே, 4 கிலோ மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கியான மேக்சிம், 15 கிலோ ஆகியவையும் மொத்தமாக வழங்கப்படுகிறது.
விதை வினியோகத்தில், ஒருகிலோ விதைக்கு, 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகளுக்கு குறைந்தது, ஒரு ஏக்கர் முதல், 2.50 ஏக்கர் வரை நிலம் இருக்க வேண்டும். தகுதியுடைய விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை நகல், நிலத்தின் கணினி சிட்டா, குடும்ப அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகிய ஆவணங்களுடன் ராசிபுரம் வேளாண்மை விரிவாக்க மையத்தை நேரில் அணுகி பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement