புரட்டாசி மஹாளய அமாவாசையில் ரூ.22 லட்சத்திற்கு காய்கறி விற்பனை
நாமக்கல்,:புரட்டாசி
மஹாளய அமாவாசை மற்றும் 4வது சனிக்கிழமையையொட்டி, நேற்று நாமக்கல்
உழவர் சந்தையில், 43 டன் காய்கறிகள், 22 லட்சம் ரூபாய்க்கு
விற்பனையாகின.
நாமக்கல் கோட்டை மெயின் சாலையில், உழவர் சந்தை
செயல்பட்டு வருகிறது. இங்கு, தினமும், அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி
வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில்
விளைந்த காய்கறிகள், கீரை வகைககள் மற்றும் பழங்களை அறுவடை
செய்துவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர்
சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
நேற்று
புரட்டாசி மஹாளய அமாவாசை மற்றும் 4வது சனிக்கிழமையையொட்டி,
காய்கறி வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. மொத்தம், 179 விவசாயிகள்
உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர்.
34,510- கிலோ காய்கறிகள், 8,490 கிலோ பழங்கள், 60 கிலோ பூக்கள் என,
மொத்தம், 43,060 கிலோ விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு
கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
அவற்றை, 8,612
பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதன் மூலம், 22 லட்சத்து, 1,750
ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி ஒரு கிலோ, 32 ரூபாய்,
கத்தரி, 40, வெண்டை, 44, புடலங்காய், 40, பீர்க்கங்காய், 62, பாகற்காய்,
56, முருங்கைக்காய், 65, சின்ன வெங்காயம், 80, பெரிய வெங்காயம், 64,
தேங்காய், 62 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது.