காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் புரட்டாசி அமாவாசை வழிபாடு
மல்லசமுத்திரம்:சேலம்-
- நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காளிப்பட்டி
கந்தசாமி கோவிலில், நேற்று, புரட்டாசி மஹாளய அமாவாசையையொட்டி,
காலை, 6:00 மணி முதல் மூலவருக்கு பால், தயிர், பன்னீர், திருமஞ்சனம்,
சந்தனம், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு மூலிகை திரவியங்களை
கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
கோவில் முழுவதும் பல வகையான வண்ண மலர்களாலும், கனிகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
லட்சுமண
சுவாமி சமாதி, வழிவிடு கணபதி, வேலாயுத சுவாமி, இடும்பன், இரட்டை
விநாயகர், வன்னிமர விநாயகர், நவகிரகங்கள், சனீஸ்வர பகவான்
உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு என, பல்வேறு
பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில்
காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.