கன்னியாகுமரியில் தொடர்மழை :ஆணைகளில் உயரும் நீர்மட்டம்
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயர்கிறது.
மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பகல் நேரங்களில் சீரான இடைவெளியில் மழை பெய்கிறது. இரவு நேரத்தில் பெய்யும் கனமழையால், மாவட்டத்தில் குளிர்ந்த சூழல் நிலவுகிறது.
கடும் வெயிலால் வறண்டு காணப்பட்ட குளங்களில் நீர் நிரம்ப தொடங்கியுள்ளது. அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால், பேசிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 18.65 அடியாகவும், 77 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 40.25 அடியாகவும் உள்ளது.
நேற்று காலை வரை அதிகபட்சமாக பேச்சிப்பாறை அணை பகுதியில் 33 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. பெருஞ்சாணி மற்றும் சுருளக்கோட்டில் 22 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.