முதல்வர் விஜய்யை எம்ஜிஆராக பார்க்கும் அதிமுக தொண்டர்கள்; அமைச்சர் அருண்ராஜ்
ஈரோடு: ஈரோடு பவானி கூடுதுறை காவிரி ஆற்றங்கரையில் அமைச்சர் அருண்ராஜ், தனது முன்னோர்க்கு தர்ப்பணம் கொடுத்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் மக்கள் மகத்தான தீர்ப்பை அளித்துள்ளார். 4 மாத நல்லாட்சிக்கான தீர்ப்பு தான் இது. சமீபத்திய வரலாற்றில் இடைத்தேர்தலில் நியாயமான முறையில், எதிர்க்கட்சிகளுக்கான உரிமையை கொடுத்துள்ளோம்.
வாக்காளர்களை பட்டியில் அடைக்காமல், பணம் கொடுக்காமல், எங்களின் சாதனைகளை மட்டுமே எடுத்துச் சொல்லி, இந்த வெற்றியை சாத்தியமாக்கியுள்ளோம். திமுகவும், அதிமுகவும் சதித்திட்டம் தீட்டினார்கள். இது அதிமுகவினருக்கு பிடிக்கவில்லை. துரோகத்திற்கான தீர்ப்பை மக்கள் வழங்கியுள்ளனர்.
கூடிய விரைவில் அதிமுக தொண்டர்கள் எல்லாம் அவர்களின் உரிமையை கேட்பார்கள். தாராபுரத்தில் கிடைத்தது மிகப்பெரிய வெற்றி. பொய் பிரசாரம் செய்தனர். ரூ.50 கோடி பெட்டி வாங்கி விட்டதாக பொய் பிரசாரம் செய்தனர். எந்தெந்த இடங்களில் ஓட்டு குறைவாக இருந்ததோ, அங்கு திமுக, அதிமுக பொய் பிரசாரம் செய்தனர். ரூ.50 கோடி கொடுக்கும் அளவுக்கு எங்களிடம் பணம் ஏது?
அதிமுக தொண்டர்கள் எல்லோரும் தவெக தலைவர் விஜய் தலைமையை ஏற்றுக் கொண்டார்கள். விஜயை அவர்கள் எம்ஜிஆராக பார்க்கின்றனர். அதிமுகவுக்கு பெரிய துரோகத்தை இழைத்தது இபிஎஸ் தான். அதனால், தான் தாராபுரத்தில் 3வது இடத்திற்கு சென்று விட்டது, இவ்வாறு அவர் கூறினார்.
அட்ராசிட்டி ஓவராதான் போய்ட்டு இருக்கு, ,மேலும்
-
அபிராமம் சுற்றியுள்ள பகுதிகளில் வழிப்பறி: போலீஸ் ரோந்தை தீவிரப்படுத்தக் கோரிக்கை
-
பருவமழை முன்னெச்சரிக்கை புயல் காப்பகங்கள் தயார் நிலை: இரவு பணியாளர் நியமனம்
-
திருப்பரங்குன்றம் மலை மேல் திருவிழாவில் சமைக்கும் பிரச்னைக்கு பா.ஜ., காரணம்: அமைச்சர் நிர்மல்குமார் சாடல்
-
வங்கதேச அணி முன்னிலை
-
வயதை வென்ற கால்கள் வியக்க வைத்த வேகம்
-
திருப்பூரின் உள்நாட்டுச் சந்தையான காதர்பேட்டை காத்திருக்கிறது!