பருவமழை முன்னெச்சரிக்கை புயல் காப்பகங்கள் தயார் நிலை: இரவு பணியாளர் நியமனம்
திருவாடானை: பருவமழை மற்றும் புயல் காலங்களில் மக்களை பாதுகாப்பதற்காக தங்குவதற்காக புயல் காப்பகங்கள் தயார் நிலையில் உள்ளது. தாலுகா அலுவலகத்தில் இரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். திருவாடானை தாசில்தார் தாமஸ் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் காலங்களில் மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்காக கடலோர பகுதியில் உள்ள தொண்டி அருகே முள்ளிமுனை மற்றும் நம்புதாளையில் புயல் காப்பகங்கள் அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழை மற்றும் இயற்கை சீற்றங்கள் தொடர்பான அவசர கால தகவல்களை பெறவும், உடனடி நடவடிக்கை எடுக்கவும், திருவாடானை தாலுகா அலுவலகத்தில் 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் அலுவலர்கள் நியமிக்கபட்டுள்ளனர்.
மழைக் காலத்தில் பாதிப்பு அல்லது அவசர உதவி தேவைப்படும் பட்சத்தில் மக்கள் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம். தகவல்களை தெரிவிக்கலாம். அலுவலர்களுடன் ஏற்கனவே ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு மழைக் கால பணிகளை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது என்றார்.