உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு; 'ஈட் ரைட்' மக்கள் இயக்கம் துவங்குவதாக துக்காராம் அறிவிப்பு
மும்பை: ''உணவு பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, சரியானதை உண்ணுங்கள் என்ற மக்கள் இயக்கத்தை விரைவில் தொடங்க உள்ளோம்,'' என, மஹாராஷ்டிர உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் துக்காராம் முண்டே தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் தே.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மருந்து மற்றும் நிர்வாகத் துறை கமிஷனராக பணியாற்றும் துக்காராம் முண்டே, உணவு பாதுகாப்பில் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
சாதாரண ஹோட்டல் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை, திடீரென சோதனை நடத்தி சுகாதாரமற்ற உணவுகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகிறார். இவரை, 'ரியல் சிங்கம்' என, மக்கள் அழைக்கின்றனர்.
இந்நிலையில், மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மஹாராஷ்டிர மருந்து மற்றும் நிர்வாகத் துறை கமிஷனர் துக்காராம் முண்டே பேசியதாவது:
உணவு பாதுகாப்பு என்பது, வெறும் அரசு ஒழுங்குமுறை மட்டுமல்ல. அது, தனிநபரின் வாழ்க்கை முறை சார்ந்த விஷயம். உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஆரோக்கியமான உணவு பழக்கங்களை மேம்படுத்தவும், தாங்கள் உண்ணும் உணவு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், 'ஈட் ரைட்' என்ற மக்கள் இயக்கத்தை விரைவில் துவங்க உள்ளோம்.
இதன்படி, பள்ளிகள், பொது இடங்கள், வழிபாட்டு தலங்கள் என, பல்வேறு பிரிவுகளில் டிஜிட்டல் விழிப்புணர்வு பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும். நாம் எதை சாப்பிட வேண்டும்; எப்படி சாப்பிட வேண்டும்; எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.
வீடுகளில் உள்ள, 'பிரிஜ்'ஜில் கூட பல்வேறு உணவு பொருட்களை முறையாக பிரித்து வைக்க தெரியாததால், உணவுகள் மாசடையும் அபாயம் உள்ளது. எனவே, சரியான முறையில் உணவை கையாள்வது குறித்து, அடுத்த சில மாதங்களில் விரிவான விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும்.
அநீதி நடக்கும் போது மக்கள் தைரியமாக குரல் எழுப்ப வேண்டும். உணவகங்கள் மற்றும் கடைகளில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மக்கள் நேரடியாக கேள்வி கேட்க வேண்டும். உணவு பாதுகாப்பு என்பது வெறும் அதிகாரிகளின் கடமை மட்டுமல்ல.
அரசியல் எனக்கு சரிப்பட்டு வராது. நான் ஒரு மக்கள் பணியாளன். தற்போது, என் அரசு பணியை சிறப்பாக செய்யவே முயற்சிக்கிறேன். அதிகாரிகள் நிரந்தரமானவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் உருவாக்கும் அமைப்புகள் நிலையானவை. நிர்வாக நடைமுறைகளை முறைப்படுத்தி நிலைநிறுத்துவதே என் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.
Proud of you Sir , you have proved your power if it is used in right direction can make a big change to the people of our country . You also have also earned great respect from all sectors of the people as you are the one who cares for what we eat . Your policy of people's health first is really inspiring . Role model for other officers to follow . Jai Hind !!
Good that we have some eye opener for hygine and adultration to secure the Gen Z group which has no moral and ethics in life. Long live Thukkaram ji
Long Live Tukaram Sir!!! My biggest salutations to you! We need a hundred more like you and this nation will reach its glorious pinnacle in prestige and power, Jai Hind!!!
இவரை போல இன்னும் லட்சக்கணக்கான துக்காராம்கள் நம் நாட்டிற்கு தேவை. நம்மிடையே இருக்கும் பல வியாதிகளுக்கு நம் உணவு பழக்கங்கள், உணவின் தரமே காரணம். உணவு பொருட்களில் கலப்படம் செய்பவர்கள் கொலை குற்றவாளிகளுக்கு சமம். அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படவேண்டும்