சென்னை அணி 'டிரா': துவங்கியது ஐ.எஸ்.எல்., கால்பந்து

பெங்களூரு: சென்னை, கோவா அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டி 1-1 என்ற கணக்கில் 'டிரா' ஆனது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் 13வது சீசன், நேற்று துவங்கியது. கோவாவில் உள்ள படோர்டா மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை, கோவா அணிகள் மோதின. 64 வது நிமிடம் சென்னை வீரர் இர்பான் யத்வாத் ஒரு கோல் அடித்தார். மறுபக்கம் கோவா வீரர் சிக்கி (75) கோல் அடித்தார். முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.
பெங்களூரு அபாரம்
பெங்களூரு கன்டீவ்ரா மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் பெங்களூரு, டில்லி அணிகள் மோதின. போட்டியின் 22 வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ரியான் வில்லியம்ஸ் கொடுத்த பந்தை பெற்ற மார்டினெஸ், இத்தொடரில் முதல் கோல் அடித்தார்.
அடுத்த 4வது நிமிடத்தில் டில்லி அணிக்கு ரோட்ரிகினோ (26) ஒரு கோல் அடிக்க ஸ்கோர் 1-1 என சமன் ஆனது. 32 வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் கோச், 'சேம் சைடு' கோல் அடிக்க, டில்லி அணி 2-1 என முந்தியது. 75 வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் மார்டினஸ், இப்போட்டியில் இரண்டாவது கோல் அடித்தார்.
போட்டி முடிய ஒரு நிமிடம் இருந்த போது, நம்பிக்கை தந்த கோச் (89), ஒரு கோல் அடித்து கைகொடுக்க, பெங்களூரு அணி 3-2 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.

Advertisement