வரலாறு படைத்த சோனோவல்: உலக 'பவுல்சில்' பதக்கம்
நியூ சவுத்வேல்ஸ்: உலக பவுல்ஸ் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என சோனோவல் வரலாறு படைத்தார்.
ஆஸ்திரேலியாவில் உலக பவுல்ஸ் சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸ் போட்டி நடந்தது. ஒவ்வொரு நாடுகளிலும் நடந்த தொடரில் தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர்கள் மட்டும் இதில் பங்கேற்றனர். இந்தியா சார்பில் புதுல் சோனோவல் பங்கேற்றார்.
லீக் சுற்றில் பங்கேற்ற 7 போட்டியில் 6ல் வெற்றி பெற்ற சோனோவல், பட்டியலில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றார். இதில் சிங்கப்பூரின் ஹாரிமன் யுயெனை 1---0 (4-4, 6-5) என்ற கணக்கில் வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறி, குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார்.
அடுத்து நடந்த அரையிறுதியில் சோனோவல், உலகின் 'நம்பர்-3', ஸ்காட்லாந்தின் லாவ் மெக்லியானை சந்தித்தார். இதில் 0-2 (5-8, 5-8) என்ற கணக்கில் தோல்வியடைந்த சோனோவல், வெண்கலப் பதக்கம் பெற்றார். இதையடுத்து இத்தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார். கடந்த முறை இவர் காலிறுதியுடன் திரும்பினார்.
பெண்கள் பிரிவில் இந்தியாவின் பங்கிதா ஹஜாரிகா, லீக் சுற்றில் 7ல் 4ல் மட்டும் வென்று, 4வது இடம் பிடித்து வெளியேறினார்.
மேலும்
-
இயற்கை உரங்களின் பயன்பாட்டிற்காக வெளிமாநிலம் செல்லும் ஆட்டுப்புழுக்கை
-
தமிழ் தளத்தில் பட்டிமன்ற கடவுள் சாலமன் பாப்பையா: உயர்நீதிமன்ற நீதிபதி புகழாரம்
-
அக்.14ல் தபால் சேவை குறைதீர் முகாம்
-
தாலுகா ஆபீஸ் பஸ் ஸ்டாப் பொதுமக்களுக்கு அவசியம்
-
குழாய் உடைந்து 2 ஆண்டு குடிநீர் வீணாகும் அவலம்
-
பாலியஸ்டர் நுால் வியாபாரிகள் பிரத்யேக சங்கம் துவக்கம்