தாலுகா ஆபீஸ் பஸ் ஸ்டாப் பொதுமக்களுக்கு அவசியம்

பல்லடம்: பா.ஜ. மாவட்ட ஊடகப்பிரிவு துணைத் தலைவர் வித்ய பிரகாஷ், தாசில்தாரிடம் அளித்த மனு:

பட்டா மாறுதல், ஓய்வூதியம், உதவித்தொகை, நில அளவை, ஆதார், ரேஷன் கார்டு, பிறப்பு - இறப்பு சான்று உள்ளிட்ட பணிகளுக்காக தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பல்லடம் தாலுகா அலுவலகம் வந்து செல்கின்றனர். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வருவோர், பஸ் ஸ்டாண்டிலோ அல்லது வடுகபாளையம் பஸ் ஸ்டாப்பிலோ இறங்கி 2 கி.மீ. துாரம் நடந்து வர வேண்டியுள்ளது.

தாலுகா அலுவலகம் முன் பல ஆண்டாக பஸ் ஸ்டாப் இல்லை. பொதுமக்கள் நலன் கருதி, தாலுகா அலுவலகம் முன்போ அல்லது அருகிலோ நிழற்குடையுடன் பஸ் ஸ்டாப் அமைத்து, அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement