'சிசிடிவி' கேமராக்களை பொருத்த மக்கள் கோரிக்கை
அரூர்: அரூர் நகராட்சி, 3வது வார்டில், 900க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக் கின்றனர். இங்குள்ள சாலை கள், தெருக்கள் உள்ளிட்ட இடங்களில், சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: அரூர் நகராட்சியில் பல்வேறு இடங்களில் 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், 3வது வார்டில், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்படவில்லை. இப்பகுதியில் இளைஞர்கள் மது மற்றும் கஞ்சா போதைக்கு அதிகளவில் அடிமையாகி, மொபைல் போன் திருட்டு, பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவம் நடக்கிறது.
எனவே, குற்றச்செயல்களை கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளை எளிதாக அடையா ளம் காணவும், 3வது வார்டுக்கு உட்பட்ட டாக்டர் பாஷா தெரு, கே.கே.நகர், பூந்தி மகால் தெரு, முருகர் கோவில் தெரு, திருவள்ளுவர் நகர் ஆகிய இடங்களில், 'சிசிடிவி' கேமராக்களை பொருத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும்
-
சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு 3 கடைக்கு ரூ.15,000 அபராதம் விதிப்பு
-
அரளி பூ விலை உயர்வு
-
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி
-
யு.பி.ஐ., பண பரிவர்த்தனை மறைமுக வரி விதிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
-
பைக் மோதிய விபத்தில் நடந்து சென்றவர் பலி
-
கவர்னர் பதவியை ஆட்டு தாடியுடன் ஒப்பிட்ட திமுக அவரின் அதிகாரங்கள் குறித்து பேச துவங்கியது எப்போது?: ஐகோர்ட் கேள்வி