3 ஆடுகள் திருட்டு
நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அடுத்துள்ள சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டுக்காரன்கொட்டாயை சேர்ந்த விவசாயி முனுசாமி, 86. இவரது மனைவி மங்கம்மாள், 80. இத்தம்பதி அவர்களுடைய விவசாய நிலத்திலுள்ள வீட்டில், ஆடு, மாடுகள் வளர்த்து வருகின்றனர்.
நேற்று அதிகாலை முனுசாமி வீட்டின் வெளியே வந்து பார்த்தபோது, வீட்டில் வளர்த்து வந்த நாய், வாயில் நுரையுடன் இறந்து கிடந்தது. மேலும், கொட்டகையில் கட்டியிருந்த, 3 ஆடுகள் திருட்டு போனது. இதில், ஆடுகளை திருட வந்த கும்பல் நாய்க்கு விஷம் வைத்து விட்டு, ஆடுகளை திருடி சென்றது தெரியவந்தது. புகார்படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement