பெண் குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் வழங்க உறுதியேற்போம்; முதல்வர் விஜய் உறுதி
சென்னை: சர்வதேச பெண் குழந்தை தினத்திற்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: பெண் குழந்தைகளைக் கொண்டாடி, அவர்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தால் சர்வதேச பெண் குழந்தை நாளாகக் கொண்டாடப்படும் இந்நாளில், பெண் குழந்தைகள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள்; அவர்களின் மழலைச் சிரிப்பு, குடும்பத்தின் மகிழ்ச்சி! அவர்களின் துள்ளல், இயற்கையின் பேரழகு! ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது, அங்கே அன்பும், கருணையும், அளவிட முடியாத ஆளுமையும் சேர்ந்தே பிறக்கின்றன.
பெண் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்வு, தரமான கல்வி, பாதுகாப்பான சூழல், சம உரிமை, முழுமையான சுதந்திரம் ஆகியவற்றை உறுதிசெய்வது நமது கடமையும், பொறுப்புமாகும். பெண் குழந்தைகளின் கனவுகளுக்குச் சிறகளித்து, முன்னேற்றத்திற்குத் துணை நின்று, பாகுபாடற்ற சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.
இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
எந்த வகையான முழு சுதந்திரம் ? மாதம் ஆயிரம், இலவச பயணம் , அரை குறை ஆடைகளுடன் குடித்து விட்டு ஆபாசமாக நடந்து ,ஆபாச பேசி குத்தாட்டம் போட்டார்களே டெல்லி ஜந்தர் மந்தரில் அந்த மாதிரியான சுதந்திரமா ? பள்ளிக்கூட மாணவ, மாணவர்கள் கூட கஞ்சா, சரக்கு அடிக்கிறார்களே சுதந்திரமா ? இளம் விதவைகள் அதிக அளவாக பாதிக்கப்படுகிறார்களே அந்த சுதந்திரமா ? எந்த வகையான சுதந்திரம் தேவை பெண்களுக்கு ?
ஸ்ரீ வைகுண்டம் MLA ..........
ஆண் பிள்ளைகள் ஓடு.
கரப்பான் பூச்சி போராட்டத்தில் பெண் பிள்ளைகளின் நாகரீகத்தை கண்ட பின்புமா இந்த முதல்வருக்கு இப்படி எல்லாம் பேசத் தோன்றுகிறது இதுதான் பெண் சுதந்திரமா இதைத்தான் இவர் தமிழகத்திற்கு கொண்டு வரப் போகிறாரா ஒரு கூத்தாடியிடம் அரசாட்சியை ஒப்படைத்த தமிழர்களுக்கு இன்னும் என்னவெல்லாம் நேர போகிறதோ
அப்ப வைகுன்டம் MLA வை கைது செய்ய மாட்டீங்க
மக்களை குழியில் தள்ளும் குள்ளநரி
அப்பிடியா..? ராகுலோட சேர்ந்தா..? பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை வர விடாமல் செய்தவர்களோரு நேற்று விருந்து சாப்பிட்டுவிட்டு இன்று பெண்கள் உரிமை, பாதுகாப்பு என்று பேசுகிறார். ஓசி பேருந்து பெண்கள் உரிமை அல்ல, அவர்களை இன்னும் சமூகத்தில் இருந்து பிரித்து அவர்கள் இன்னும் அடிமைகள் தான் என்று காட்டும் திட்டம்.
குடும்பத்தில் உள்ள பெண் குழந்தையை முதலில் சந்திப்போம்
முருகன் தன் குடும்பத்திற்கு முதலில் சோறு போடுகிறாரா
முறையாக அதை செய்வதால்
வரும் கோபம் என்னுடையது அது
உனக்கு இல்லை அதனால் தான் முட்டு கொடுத்து கொண்டு உள்ளாய் திருட....
நேத்து பப்ஸ் கூட சேர்ந்து காப்பேசீனோ காபி குடிச்சிட்டு சுத்தியாச்சு இன்னைக்கு பெரியவர் கூட பிசி அப்போ திங்கள் செவ்வாய் தலீவரு லீவா?
ஊருக்கு உபதேசம்மேலும்
-
வனவிலங்குப் பூங்காவில் புலி தாக்கியதில் ஒருவர் பலி
-
எப் 35 போர் விமானங்களின் அருகில் கூட விடுவதில்லை; அமெரிக்க தளபதியிடம் நேருக்கு நேர் சொன்னார் இந்திய தளபதி
-
சென்னை பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி
-
ஓராண்டு காலம் அமைதிக்கு இடையூறு செய்யக்கூடாது; கரப்பான் கட்சியினருக்கு கோர்ட் நிபந்தனை
-
ஏஐ தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது: மைக்ரோசாப்ட் சிஇஓ அறிவுறுத்தல்
-
சவுதியின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் உறுதுணையாக நிற்கிறோம்: ஹவுதி தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்