கோவக்குளம் சாலையில் மண் அரிப்பால் அச்சம்
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
அடுத்த பிச்சம்பட்டி, கோவக்குளம், பழைய ஜெயங்கொண்டம் வழியாக
பஞ்சப்பட்டி வரை தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த, தார்ச்சாலை
நெடுஞ்சாலை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இந்நிலையில், கோவக்குளம்
காட்டுவாரி பகுதி வழியாக செல்லும் தார்ச்சாலையானது, வாய்க்கால் கரை
அருகில் அமைந்துள்ளது. கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம்
உருவாகியுள்ளது. இந்த வழியாக விவசாயிகள், மக்கள், மாணவர்கள் என
பலதரப்பட்ட மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர்.தார்ச்சாலையோர
பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், வாகனங்களில் வரும்போது
சாலையில் ஒதுங்க முடியாத நிலை உள்ளது. மேலும், சாலையோரத்தில் சென்றால்
வாகனம் பள்ளத்தில் இறங்கும் அபாயம் உள்ளது. எனவே, கோவக்குளம்
தார்ச்சாலை வாய்க்கால் அருகில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரி செய்ய, மண்
கொட்டி நிரவி சமன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை
விடுத்துள்ளனர்.
மேலும்
-
மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
-
செவன்த் டே பள்ளியில் அறிவியல் கண்காட்சி
-
மேலாளரை கத்தியால் குத்திய டிரைவர், கண்டக்டர் கைது
-
கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி விற்க முடிவு: விலை உயர்வை சமாளிக்க திட்டம்
-
நவம்பரில் மதுரை புத்தகத் திருவிழா: நவ.13 முதல் நடத்த திட்டம்
-
குப்பையை தரம்பிரித்து வழங்காத கடையின்தொழில் உரிமம் ரத்து: நகராட்சி எச்சரிக்கை