வாழைத்தார் விலை சரிவு
கிருஷ்ணராயபுரம்ஊ:கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம்,
கருப்பத்துார், கொம்பாடிப்பட்டி, வல்லம், வீரவள்ளி, சிந்தலவாடி,
மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் விளை
நிலங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.
வாழை சாகுபடிக்கு
வாய்க்கால் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. வாழைத்தார்களை
அறுவடை செய்து லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டிகளில்
கொண்டு வந்து விவசாயிகள் விற்று வருகின்றனர்.வாழைத்தார்கள்
தற்போது விலை சரிந்து விற்பனை செய்யப்பட்டது. இதில், பூவன்
வாழைத்தார் ஒன்று, 250 ரூபாய், ரஸ்தாளி, 300 ரூபாய், கற்பூரவள்ளி, 150
ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர்
வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதல்வர் விஜயின் நாகரிக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்; அமைச்சர் ராஜ்மோகன்
-
சிதம்பரத்தில் போலீசை கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல்
-
தார் சாலை அமைக்க மக்கள் கோரிக்கை
-
கல்வி சீர் வழங்கல்
-
வெளிநாட்டில் இருந்து வந்தவர் டூவீலர் விபத்தில் பலி: போலீசார் விசாரணை
-
அரிசி விலை உயர்வால் சிறு குறு தானியத்திற்கு மாறும் விவசாயிகள்
Advertisement
Advertisement