பண்டிகை காலங்களில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுமா?
கரூர்:நாடு முழுவதும், வரும் நவ., 8ல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அதையொட்டி,
கரூர் ஜவஹர் பஜார், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பகுதி, கரூர்
எம்.எல்.ஏ., அலுவலக சாலை உள்ளிட்ட பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட
தற்காலிக தரைக்கடைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், ஜவஹர் பஜார்
பகுதியில் ஜவுளி கடைகள், நகை கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள்
உள்ளதால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புத்தாடைகள், பொருட்களை
வாங்க தொடங்கியுள்ளனர்.
இதனால், ஜவஹர் பஜாரில் கடும்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதை பயன்படுத்தி
கொண்டு, சமூக விரோதிகள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவர்.
இதனால்,
கரூர் ஜவஹர் பஜார் பகுதியில், பகல் நேரத்தில் தீபாவளி பண்டிகை முடியும்
வரை, கனரக வானங்கள் செல்ல, டவுன் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.