மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் முன்னிலையில் முதல்வர் விஜய் பேச்சு
சென்னை: பிரதமர் மோடி, சென்னையில் 13 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் துவக்கி வைத்த விழாவில் முதல்வர் விஜய் பேசியதாவது: தமிழக மக்கள் சார்பில் பிரதமர் மோடியை வரவேற்கிறேன். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை துவக்கி வைத்ததற்காக நன்றி.
தனித்துவம்
பல்லாயிரம் ஆண்டு கடந்த பண்பாடு, அவற்றை இன்றளவும் உயிர்ப்புடன் பேணி பாதுகாத்து வரும் மக்களையும் கொண்ட சிறப்பு மிக்க மாநிலம் தமிழகம் ஆகும். உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழை தாய்மொழியாக கொண்ட இம்மாநிலம் சிறப்பான வரலாறு, இலக்கியம், கலை, கட்டட கலை ஆகியவற்றால் தனித்துவம் பெற்றுள்ளது.
வளர்ச்சி
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் நமது அரசு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கல்வி சுகாதாரம், வேளாண் வளர்ச்சி, மீனவர் நலன் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.
குழந்தைகள், பெண்கள், திருநர்கள், விவசாயிகள், நெசவாளர்கள் அனைத்து தரப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டு நலத்திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்துகிறது.
பங்களிப்பு
தொழில், அறிவியல் , கலை இலக்கியம் ஆகிய துறைகளில் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பங்களித்து வரும் மாநிலம் தமிழகம் ஆகும்.
@block_Y@மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படும்போது, அதன் பலன் மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதே நமது அணுகுமுறை.தமிழகம் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. 2036ம் ஆண்டில், 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கினை நோக்கி வேளாண்மை, தகவல், தொழில்நுட்ப திட்டங்களை தீட்டி வருகிறது.block_Y
இந்த வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல புதுமையான கண்டுபிடிப்பு, முதலீடு, உள்கட்டமைப்பு ஆகிய மூன்றுக்கும் நாம் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
@block_B@
அதேநேரம் வளர்ச்சியின் பயன் சென்னையை தாண்டி தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்றடையும் என்ற வகையில் செயல்படுகிறோம்.தமிழக இளைஞர்கள் நமது பலம். அவர்களின் திறன், தொழில்நுட்ப அறிவு, புதுமை சிந்தனை ஆகியவற்றை உலகளாவிய சிந்தனையுடன் இணைப்பதே நமது இலக்கு.block_B
இன்று துவங்கும், துவக்கும் திட்டங்கள் அடுத்த தலைமுறைக்கான முதலீடுகளாக அமைய வேண்டும். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
முதல்வர் கோரிக்கை
பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள்
* 65 கிமீ நீளம் கொண்ட மூன்றாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு (விமான நிலையம் - கிளாம்பாக்கம், பூந்தமல்லி சுங்குவர்சத்திரம்,கோயம்பேடி - பட்டாபிராம்) விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும்
*கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
*மாநிலங்களுக்கு இடையே ஒசூர் - கர்நாடகாவின் பொம்மசான்ட்ரா மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி வேண்டும்.
*செங்கல்பட்டு - திருச்சி (என்எச்32), திருச்சி பஞ்சப்பூர் - கரூர் ஜெயபுரம் (என்எச்81),கரூர்- கோவை, மாதவரம்- சோழவரம்( என்எச் 87) சாலையை ஆறுவழிச்சாலையாக உயர்த்த வேண்டும்
*கோதாவரி - காவிரி திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும்.
*சர்வ சிக்சா அபியான் திட்டத்தின் கீழ் ரூ.5,110 கோடி உடனடியாக விடுவிக்க வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
*ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விஜய் வைத்தார்.
விஜய் நேற்று சந்தித்து உறவாடி ய ராகுல் நதிநீர் இணைப்பு திட்டத்தையே கடுமையாக எதிர்க்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் எந்த நதிகளும் இணைக்கப்படவில்லை. முதலில் தெலங்கானா காங் அரசின் எதிர்ப்பை நிறுத்த வையுங்க விஜய்.
காங்கிரஸ் கட்சி மத்தியில் இருந்த போது, அதன் நம்பிக்கையான கூட்டணி கட்சி என்ற முறையில் வளமான துறைகள் பலவற்றை பெற்று, திமுக தனது வளத்தை பெருக்கிக் கொண்டது. மத்திய ஆட்சி பொறுப்பில் இருந்த போதெல்லாம் கச்சத்தீவு, இந்தி திணிப்பு, நீட் தேர்வு இவை பற்றி வாய் திறக்காத திமுக, தற்போது இந்தி தெரியாது போடா, என்பது சந்தர்ப்பவாத அரசியல். எனவே மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை மாநில அரசு பெற வேண்டுமேயன்றி, ஒன்றிய அரசு என்று கூறி விட்டு, ஒன்றாமல் இருந்தால் நஷ்டம் தமிழகத்துக்கு தான்.
மாநில நிர்வாகம் உள்ளாட்சி அமைப்புகள் நிதி உறவு பரவலாக இருக்க வேண்டும். திமுக சென்னையை சுற்றி வளர்ச்சி முதலீடு. இந்தியா நிர்வாக வசதிக்கு மொழி மாநிலம். மாநில நிர்வாகம் தமிழக அரசு என்ற உணர்வில் மத்திய அரசுடன் போட்டி கூடாது. யார் ஆண்டாலும் தேச பாதுகாப்பு மத்திய அரசு பொறுப்பு . தேசிய கொள்கைக்கு எதிராக செயல் கூடாது.
மத்திய அரசை எதிர்த்து தன் குடும்ப கல்லாவை நிரப்பிக் கொண்ட காலம்சென்ற ஆட்சியில் நிமிடத்தொருத்தரம் பிதற்றி திரிந்த த்ரவிட மாடல் ஒழிந்தே விட்டது. விஜய் இனி ப்ரீ பேர்ட். ஜெயாவிர்கு பிறகு பின்னோக்கி சென்ற தமிழக வளர்ச்சி இனி மத்திய அரசுடன் இணைந்து பீடு நடை போடட்டும்
மத்திய அரசு என்றுமே தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதில்லை. மாநில அரசின் கொள்கை முடிவுகள் மத்திய அரசு திட்டங்களை பாதிக்காமல் இருந்தால் நல்லது.
இதை முதலிலேயே கடைபிடித்திருந்தால் தமிழ்நாடு எங்கேயோ போயிருக்கும்
பரந்தூருக்கு அனுமதி கொடுத்ததே பறந்து காத்தோட போச்சு? இதுல புதுசா ஓசூர், மதுரை, கோயமுத்தூருக்கு வேணுமால்ல? மோடி அய்யா நீங்க அனுமதி மற்றும் நிதி கொடுப்பீங்க. யாராச்சும் அங்க போராடுவாங்க. உடனே இந்த தியாகிகள் உள்ளே போய் உங்க மேல பழியை போட்டு திட்டத்தை ரத்துசெய்து மக்களிடம் நல்ல பெயர் எடுத்துப்பாங்க. தேவையா இது? பரந்தூருக்கு ஒரு வழி சொல்லாமல் வேறு எந்த திட்டத்திற்கும் தமிழ் நாட்டிற்கு அனுமதி கொடுக்காதீங்க.
இரு வேடம் போடும் உத்தமர்
சொல்வதை பிரதமர் நம்பக்கூடாது
திராவிட முருகன்..உங்கள் எரிச்சல் தெரிகிறது... உங்கள் தட்டில் எதுவும்.விழாது
என்ன முருகா. எலி ஓடுது...பிஜேபிக்கு அறிவுரையா
தட்டை வைத்து பிழைப்பு நடத்துவது யார் என்று பார் நேற்று ராகுல் உடன் இன்று பிரதமர் உடன்
முருகா முன்னாடி திமுக ராகுல் கூட தான் கூட்டணி வைத்தது...இந்தா அலுமினிய தட்டுமேலும்
-
சவுதி அரேபியாவில் நடந்த தாக்குதலில் இந்தியர் பலி... 11 பேர் காயம்; தூதரகம் தகவல்
-
சிறுமி 5 மாதம் கர்ப்பம் :வாலிபர் மீது ' போக்சோ'
-
22 கிலோ கஞ்சா பறிமுதல்: போடியில் இருவர் கைது
-
சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் இளைஞர் மீது தாக்குதல்தடுத்த இரு போலீசார் காயம்
-
குறிச்சி குளத்துக்கு வந்த வெளிநாட்டு விருந்தினர்கள்!
-
உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணி; ராகுல் அறிவிப்பு