இடதுசாரிகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல்:இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, டில்லியில் போராடும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் இடதுசாரி இயக்க தலைவர்களை கொலைவெறி தாக்குதல் நடத்தி கைது செய்ததை கண்டித்தும், டில்லியில் உள்ள கம்யூ., கட்சி தலைமை அலுவலகத்தில், காவல்துறை, துணை ராணுவத்தை கொண்டு தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், நாமக்கல் பூங்கா சாலையில், இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

முன்னாள் மாவட்ட செயலாளர் ரங்கசாமி தலைமை வகித்தார். இ.கம்யூ., மாவட்ட செயலாளர் அன்புமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து கோஷம் எழுப்பினர். மாவட்ட செயலாளர் செல்வராஜ், ராசிபுரம் நகர செயலாளர் மணிமாறன், நிர்வாகிகள் வெங்கடேசன், வேலுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement