கூட்ஸ் ஷெட் தொழிலாளர் கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல்:ரயில்வே கூட்ஸ் ஷெட் தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், நாமக்கல் ரயில் நிலையம் முன் கோரிக்கை விளக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். நிர்வாகிகள் தங்கராஜ், இளங்கோ, சுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வேலுசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

நாமக்கல் ரயில்வே கூட்ஸ் ஷெட்டில், தொழிலாளர்கள், 24 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பதை ரத்து செய்து, ஏற்கனவே இருந்தவாறு, காலை, 6:00 முதல், மாலை, 6:00 மணி வரை, வேலை நேரமாக அறிவிக்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி இ.எஸ்.ஐ., பி.எப்., திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குடிநீர், ஓய்வறை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Advertisement