2 மாதங்களில் மின் வாரிய தலைவர் மாற்றம்: புதிய தலைவருக்கு முழு சுதந்திரம் அவசியம்
சென்னை: தமிழக மின் வாரிய தலைவராக, கடந்த ஜூலையில் நியமிக்கப்பட்ட அருண்ராய் மாற்றப்பட்டு, புதிய தலைவராக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டு உள்ளார். புதிய தலைவரை முழு சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் தான், மின் தடை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு காண முடியும் என்கின்றனர், பணியாளர்கள்.
தமிழகத்தில் மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைத்தாலும், மின் சாதன பழுதால், மின் தடை ஏற்படுகிறது. இந்தாண்டு கோடை காலம் முடிவடைந்தும், வெயில் இன்னும் கடுமையாக உள்ளது. இதனால், தினசரி மின் தேவை சராசரியாக, 20,000 மெகாவாட்டாக உள்ளது.
மத்திய தொகுப்பு மற்றும் காற்றாலை மின்சாரமும் குறைந்ததால், 2,000 மெகாவாட்டுக்கு மின் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால், சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில், மின் வெட்டு செய்யப்பட்டது.
இம்மாத இறுதியில் வட கிழக்கு பருவ மழை சீசன் தொடங்குகிறது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின் சாதனங்கள் சீரமைப்பு பணிகளை, கடந்த மாதம், 30ம் தேதிக்குள் முடிக்குமாறு, பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், இன்னும் அந்த பணிகள் முடிவடையவில்லை.
கடந்த ஜூலையில், மின் வாரிய தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு, அம்மாதம், 16ம் தேதி, வாரிய தலைவராக அருண்ராய் பொறுப்பேற்றார். அவர் இரண்டரை மாதங்களில் மாற்றப்பட்டு, தற்போது, ஏற்கனவே மின் வாரிய தலைவராக பணியாற்றிய, அனுபவமிக்க ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய தலைவரை சுதரந்திரமாக செயல்பட அனுமதித்தால் மட்டுமே, மின் வாரிய பிரச்னைகளுக்கு, விரைவாக தீர்வு காண முடியும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய பொறியாளர், தொழிலாளர் ஐக்கிய சங்க பொதுச்செயலர் சுப்ரமணியன் கூறியதாவது:
எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, விஜயராகவன் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியை, மின் வாரிய தலைவராக நியமித்தார். அவர், அரசியல் குறுக்கீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டார். இதனால், சேலம் மேட்டூர் அனல் மின் நிலையம் உள்ளிட்ட மின் திட்ட பணிகள் குறித்த காலத்தில் கொண்டு வரப்பட்டன. களப்பணி தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் போன்ற பணிகளை செயல்படுத்தினார்.
தற்போது, 'கார்ப்பரேட்' நிறுவனங்களின் ஆதிக்கம் மின் வாரியத்தில் உள்ளது. அதற்கு ஏற்ப அரசியல் குறுக்கீடு வரும்போது, அனுபவமிக்க அதிகாரிகளாக இருந்தாலும் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, ஏற்கனவே மின் வாரிய தலைவராக இருந்த ராஜேஷ் லக்கானிக்கு, மழை, புயல் கால சீரமைப்பு பணிகளில் அனுபவம் உள்ளது. அவரை சுதந்திரமாக செயல்பட, அரசு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, தமிழக மின் வாரிய தொழிலாளர் கூட்டமைப்பு பொதுச்செயலர் சேக்கிழார் கூறுகையில், ''மின் வாரிய தலைவராக மூன்று ஆண்டுகளுக்கு மேல், ராஜேஷ் லக்கானி பணியாற்றிவர். மின் தடை, மின் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளை கையாள, அவருக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்,'' என்றார்.
அனுபவமிக்க அதிகாரிகளும் சுதந்திரமாக செயல்பட முடியாமல் திணறுவதற்கு காரணம் ஆளும் கட்சியிலுள்ள சில்லரை தலைவர்களால் அதிகாரிகள் மிரட்ப்படுகிறார்கள் என்பது கண்கூடாக தெரிகிறது. அவ்வாறு மிரட்டப்படும் அதிகாரிகள் உடனே அதை முதல்வர், முதன்மை செயலாளர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
மாற்றிருக்க வேண்டியவர் இதன் துறை அமைச்சர் நிர்மல் குமார். அவர் இவ்வளவு முக்கிய துறைக்கு முழு நேரம் பார்க்காமல் எதோ சிஎம் போல் எல்லா துறைகளிலும் தலை இட்டு மின்சார துறை செயலிழந்து விட்டது.
Wait .. மந்திரிசபை மாற்றத்தில் இலாகா மாறலாம்.
சுதந்திரம் கொடுத்து விட்டால் வசதியாக இருக்குமாமேலும்
-
வனவிலங்குப் பூங்காவில் புலி தாக்கியதில் ஒருவர் பலி
-
எப் 35 போர் விமானங்களின் அருகில் கூட விடுவதில்லை; அமெரிக்க தளபதியிடம் நேருக்கு நேர் சொன்னார் இந்திய தளபதி
-
சென்னை பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி
-
ஓராண்டு காலம் அமைதிக்கு இடையூறு செய்யக்கூடாது; கரப்பான் கட்சியினருக்கு கோர்ட் நிபந்தனை
-
ஏஐ தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது: மைக்ரோசாப்ட் சிஇஓ அறிவுறுத்தல்
-
சவுதியின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் உறுதுணையாக நிற்கிறோம்: ஹவுதி தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்