22 கிலோ கஞ்சா பறிமுதல்: போடியில் இருவர் கைது
போடி: தேனி மாவட்டம் போடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
அணைக்கரைப்பட்டி விலக்கு அருகே போடி தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் நின்றிருந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒத்தவீடு பூமி ராஜா 59, கோட்டையன் 56, ஆகியோரை பிடித்து சோதனை செய்தனர். அவர்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் டிரம்மில் ரூ.2.75 லட்சம் மதிப்பிலான 22 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் பதகிரியை சேர்ந்த சூரி என்பவரிடமிருந்து கஞ்சா வாங்கியதாவும், விற்பனைக்காக தேனி மாவட்டத்திற்கு கொண்டு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இவர்கள் மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை தொடர்பாக மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.43 கோடி கடத்தல் போதைபொருள் பறிமுதல்; கடத்தல்காரர்கள் 2 பேர் கைது
-
தேர்தல் ஆணையர் விவகாரத்தில் தலையிடுவது ஏன்? கரப்பான் அமைப்பினருக்கு மத்திய அமைச்சர் கேள்வி
-
சவுதி அரேபியாவில் நடந்த தாக்குதலில் இந்தியர் பலி... 11 பேர் காயம்; தூதரகம் தகவல்
-
சிறுமி 5 மாதம் கர்ப்பம் :வாலிபர் மீது ' போக்சோ'
-
சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் இளைஞர் மீது தாக்குதல்தடுத்த இரு போலீசார் காயம்
-
குறிச்சி குளத்துக்கு வந்த வெளிநாட்டு விருந்தினர்கள்!
Advertisement
Advertisement