சவுதி அரேபியாவில் நடந்த தாக்குதலில் இந்தியர் பலி... 11 பேர் காயம்; தூதரகம் தகவல்
ரியாத்: சவுதி அரேபியா தலைநகரான ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், 12 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய இந்த தாக்குதலில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சவுதிக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியர்கள் 11 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளது.
இது தொடர்பாக தூதரகம் வெளியிட்ட பதிவில்; உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம். அவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்து வருகிறோம், இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும்
-
ரூ.43 கோடி கடத்தல் போதைபொருள் பறிமுதல்; கடத்தல்காரர்கள் 2 பேர் கைது
-
தேர்தல் ஆணையர் விவகாரத்தில் தலையிடுவது ஏன்? கரப்பான் அமைப்பினருக்கு மத்திய அமைச்சர் கேள்வி
-
சிறுமி 5 மாதம் கர்ப்பம் :வாலிபர் மீது ' போக்சோ'
-
22 கிலோ கஞ்சா பறிமுதல்: போடியில் இருவர் கைது
-
சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் இளைஞர் மீது தாக்குதல்தடுத்த இரு போலீசார் காயம்
-
குறிச்சி குளத்துக்கு வந்த வெளிநாட்டு விருந்தினர்கள்!