சிறுமி 5 மாதம் கர்ப்பம் :வாலிபர் மீது ' போக்சோ'

கடலுார்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர்.

புதுச்சேரி, ஒதியம்பட்டைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் பிரதீப், 20; இவர், 17 வயது சிறுமியை காதலித்தார். காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே இருவரையும் கண்டித்தனர். எனினும், பிரதீப், கடந்த பிப்., மாதம் சிறுமியை அழைத்துச் சென்று, கடலுார் அடுத்த தென்னம்பாக்கம் அழகர் கோவிலில் திருமணம் செய்தார். பிறகு, விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தியுள்ளனர். இதற்கிடையே, சிறுமி உடல் நிலை பாதித்து, கடந்த ஜூலை மாதம் புதுச்சேரி ராஜிவ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற போது, அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், கடலுார் அனைத்து மகளிர் போலீசார், நேற்று பிரதீப் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழும், திருமணத்திற்கு உடந்தையாக இருந்நதாக அவரது தாய் காஞ்சனா,44; உறவினர் பத்மாவதி ஆகியோர் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement