வருவாய் துறையுடன் கை கோர்த்து நிலத்தை அபகரித்த ரியல் எஸ்டேட் கும்பல்! கண்களில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் நுாதன போராட்டம்
கோத்தகிரி: கோத்தகிரி அருகே, வருவாய்த்துறையினரை கண்டித்து, கண்களில் கருப்பு துணி கட்டி, விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோத்தகிரி நடுஹட்டி கிராமத்தில், 180க்கு மேற்பட்ட, குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் இருந்து, தங்களது பட்டா நிலங்களை அனுபவித்து வருகின்றனர். சமீப நாட்களாக, இதே பகுதியை சேர்ந்த ஒருவர், சிட்டாவில் பெயர் இல்லாத வெளிமாவட்டத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்களுக்கு, எங்களது பெயர்களை நீக்கி, பட்டா மாறுதல் செய்து, முறைகேடாக பத்திரப்பதிவு செய்து வந்துள்ளார்.
இது குறித்து, வருவாய்த்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில முதல்வருக்கு கோரிக்கை விடுத்தும் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
பிரச்னைக்கு தீர்வு காண்பதுடன், முறைகேடுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கண்களில் கருப்பு துணி கட்டி, பஜனை பாடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நுாதன போராட்டம்
கிராம பிரமுகர் ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘‘ஆங்கிலேயர் காலத்தில் பட்டா வழங்கப்பட்ட நிலையில், வாரிசுகள் அந்த நிலத்தை தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர். வெளி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு, எங்களது பெயர்களை சிட்டாவில் இருந்து நீக்கி, அவர்களது பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கொரோனா மற்றும் தேர்தல் நேரத்தில் இந்த விதிமீறல் அதிகமாக நடந்துள்ளது. சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடவுளிடம் முறையிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்' என்றார்.
தாசில்தார் மகேந்திர குமார் கூறுகையில், ‘‘கிராம சபை கூட்டத்தில் மனு பெறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் முறையாக கோரிக்கை மனு அளிக்கும் பட்டத்தில், தீர்க்கப்பட கூடிய இந்த பிரச்னை, உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.’’ என்றார்.
மேலும்
-
சவுதி அரேபியாவில் நடந்த தாக்குதலில் இந்தியர் பலி... 11 பேர் காயம்; தூதரகம் தகவல்
-
சிறுமி 5 மாதம் கர்ப்பம் :வாலிபர் மீது ' போக்சோ'
-
22 கிலோ கஞ்சா பறிமுதல்: போடியில் இருவர் கைது
-
சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் இளைஞர் மீது தாக்குதல்தடுத்த இரு போலீசார் காயம்
-
குறிச்சி குளத்துக்கு வந்த வெளிநாட்டு விருந்தினர்கள்!
-
உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணி; ராகுல் அறிவிப்பு