முதல்வர் விஜயுடன் இணைந்து தமிழகத்தின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்வேன்: பிரதமர் மோடி
சென்னை:சென்னையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். ''தமிழக சகோதர சகோதரிகளே வணக்கம்'' என தமிழில் கூறி அவர் உரையை துவக்கினார்.
பிறகு அவர் பேசியதாவது:
வாழ்த்து
சென்னையில் உங்களுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய நாள் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நாள். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அதே நேரத்தில், முடிந்த திட்டங்களை துவக்கி வைக்கிறோம். சில திட்டங்கள் அன்றாட பயணத்தை விரைவாக்கும். இன்னும் சில திட்டங்கள் தொழில்துறையை பலப்படுத்தும். தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும். மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.




சென்னை ஐஐடியில் மூளை ஆய்வகத்தை பார்வையிட்டேன் . இந்த துறையில் நடக்கும் ஆய்வு பல புதிய வாய்ப்புகளை உருவாக்கும். சென்னை மெட்ரோவில் புதிய திட்டத்தை துவக்கி வைத்தேன். கோவில் முதல் மெட்ரோவை தமிழகத்தின் அனுபவமே இந்தியாவின் உணர்வு. இந்தியா தனது கலாசார சக்தியில் இருந்து உத்வேகம் பெறுகிறது. அறிவியல் வளர்ச்சியால் முன்னேறுகிறது. நவீன உள்கட்டமைப்புகளால் புதிய வாய்ப்புகளை அமைத்து வருகிறது. நமது பாரம்பரியம், எதிர்காலம் தொடர்பான எதிர்பார்ப்புகளை ஒன்றிணைத்து முன்னேறி வருகிறோம்.
மாநிலங்களின் விருப்பம்
சில நாட்கள் முன்பு, என்னுடைய 25 ஆண்டுகால பொது சேவை நிறைவடைந்தது. அக்டோபர் 2001 ம் ஆண்டில் முதல்வராக பதவியேற்றேன். அப்போது முதல் சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது. 25 ஆண்டு கால கட்டத்தில் ஜனநாயகத்தின் இரண்டு சக்திகள் மீது பலமான நம்பிக்கை வலுப்பட்டது. நாட்டின் குடிமக்கள் , கூட்டாட்சி ஆகியவற்றின் மீது நம்பிக்கை ஏற்பட்டது. மாநிலங்களின் வளர்ச்சியில் நாட்டின் முன்னேற்றம் என்ற மந்திரத்தை மனதில் தாங்கி பயணித்து வந்துள்ளேன். முதல்வராக இருந்ததால், மாநிலங்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டேன். அதனால், பிரதமராக அதனை நிறைவேற்ற முயற்சி செய்தேன். அதேநேரத்தில் மாநிலங்களின் ஆர்வத்தையும் நிறைவேற்ற முயற்சி செய்யப்பட்டது.
@block_B@
கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பிரதமரான பிறகு, ஜெயலலிதா, பன்னீர்செல்வம், ஸ்டாலின் இபிஎஸ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு ஏற்பட்டது. அரசுகள் மாறின. தமிழகத்தின் வளர்ச்சியும், மக்களுக்கு சேவை செய்யும் மன உறுதியும் எப்போதும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்று இதே உறுதிபாட்டுடன் முதல்வர் விஜய் உடன் இணைந்து தமிழகத்தின் வளர்ச்சி பயணத்தை முன்னெடுத்து செல்வோம்.block_B
தமிழக நகர்ப்புற மேம்பாடு நமது முக்கியமான நோக்கம். நகரமயமாக்கல் சவால் அல்ல. மாறாக அது வாய்ப்பு என்று கருதி வந்து இருக்கிறேன். இதில் பொது போக்குவரத்துக்கு பெரிய பங்கு உள்ளது. போக்குவரத்து முறைகள் நன்றாக இருக்க வேண்டும். மக்களின் வாழ்க்கை எளிதாகிறது.
மெட்ரோ நெட்வொர்க்
கடந்த 10 ஆண்டுகளாக நாடு முழுதும் மெட்ரோ திட்டத்தை விரிவுபடுத்தி உள்ளோம்.2014 ல் ஐந்து நகரங்களில் மட்டுமே மெட்ரோ இயங்கியது. இன்று 25 நகரங்களில் மெட்ரோ சேவைகள் செயல்படுகிறது.2014 ல் மெட்ரோ திட்டத்தின் தூரம் 250 கிமீ மட்டுமே இருந்தது. இன்று இந்த நெட்வொர்க் 1100 ஐ தாண்டி உள்ளது. சென்னை மெட்ரோ விரிவாக்கம் காரணமாக நெட்வொர்க் பெரிதாகிறது.
சென்னை சாமானியமக்கள், ஊழியர்கள், மாணவர்கள் வயதானவர்களின் பயணம் எளிதாக வேண்டும் என்பதே மெட்ரோ திட்டத்தின் நோக்கம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
கட்டி புடிச்சிராதீங்க சி. எம். ஜாக்கிரதை
தமிழ் புலவர் இந்தில பேசினா புரிலயே கோபால்.
உருது மொழியில் பேசினால் உங்களுக்கு ஆழமாகப் புரிந்திருக்கும்
தண்ட சோறு எப்படி அப்பாவியா கேட்கிறது
இதோ மாதிரி தான் எடப்பாடி உடன் பேசினார்கள்
இன்று எடப்பாடி நிலை
ஆமாம் முருகன்...திமுக தலைவர் அது கூட செய்யவில்லை...அதனால் தமிழக மக்கள் மொத்தமாக செய்து விட்டார்கள்...உனக்கு மகிழ்ச்சி தானே
டூப்ளிகேட்
ஒரிஜினல் கொத்தடிமை.. ஹி.. ஹி..