ரூ.43 கோடி கடத்தல் போதைபொருள் பறிமுதல்; கடத்தல்காரர்கள் 2 பேர் கைது

குவஹாத்தி: குவஹாத்தியில் ரூ.43 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்தது; கடத்தல்காரர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

நம் அண்டை நாடான மியான்மரில் இருந்து இரு லாரிகளில் போதை பொருள் கடத்தப்படுவதாக போதைபொருள் கட்டுப்பாட்டு அமைப்புக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில் கடந்த 6ல் அதிகாரிகள் வாகன சோதனை செய்தபோது அங்கு வந்த இரு லாரிகளில் எரிபொருள் டேங்க்குகளில் பிரத்யேக அறை அமைத்து அதில், 43 கோடி ரூபாய் மதிப்புள்ள, 54 கிலோ எடையுள்ள மெத் ஆம்பெட்டமைன் என்ற போதை மாத்திரைகளை கடத்தி வந்ததை கண்டுபிடித்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த நடவடிக்கையின்போது இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மியான்மரில் இருந்து கடத்திவரப்பட்டது விசாரணையில் அம்பலமானது; போதை பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நடவடிக்கை தீவிர நடந்து வருகிறது. போதை பொருள் கடத்தல் கும்பல்களை ஒழிப்பதற்கும் உள்ள தனது உறுதிப்பாட்டை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

Advertisement