துணை தேர்தல் கமிஷனராக பிரகாஷ் ராஜ்புரோஹித் நியமனம்

புதுடில்லி: துணை தேர்தல் கமிஷனராக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி பிரகாஷ் ராஜ்புரோஹித் நியமிக்கப்பட்டு உள்ளார். ராஜஸ்தான் கேடரைச் சேர்ந்த, 2010 பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், 2030 ஏப்., 8 வரை பதவியில் இருப்பார். அதே போல், 1996 பேட்ச் இந்திய தொலை தொடர்பு சேவை அதிகாரியான விவேக் காரே, தேசிய தேர்வுகள் முகமையின் இணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தவிர, மத்திய அமைச்சரவை நியமனக் குழு, இணை செயலர் மற்றும் அதற்கு இணையான நிலைகளில், 27 அதிகாரிகளை நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகத்தில், ரவிசங்கர், சித்தரஞ்சன் தாஷ், பி.மனோஜ் குமார், அபிஷேக் பகோடியா ஆகியோர் இணை செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நலத் துறையின் இணை செயலர்களாக முகமது யசீர் உல்லா கே, ரிது சர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். கார்ப்பரேட் விவகாரங்கள் துறை இணை செயலராக தன்வி சுந்தரியாலும், கலாசாரத் துறை இணை செயலராக இந்தர்ஜீத் சிங்கும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement