சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு 3 கடைக்கு ரூ.15,000 அபராதம் விதிப்பு

நாமக்கல்: சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து வழங்கிய, மூன்று ஓட்டல்களுக்கு, தலா, 5,000 ரூபாய் அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத்-துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

நாமக்கல்லில் உள்ள ஓட்டல்களில், சுகாதார-மான முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்யப்படுகிறதா என, நாமக்கல் உணவு பாது-காப்பு அலுவலர் மணிமாறன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.நாமக்கல் - சேலம் சாலை முதல், முதலைப்-பட்டி வரை உள்ள, 10 ஓட்டல்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், மூன்று ஓட்டல்-களில், உடைந்த
சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த, 300 முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதுபோல், தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்-படுத்தப்படும், மூன்று கிலோ பிளாஸ்டிக் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதைய-டுத்து, அந்த கடைகளுக்கு, தலா, 5,000 வீதம், மொத்தம், 15,000 ரூபாய்
அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement