பைக் மோதிய விபத்தில் நடந்து சென்றவர் பலி

நாமகிரிப்பேட்டை; நாமகிரிப்பேட்டை அருகே ரோட்டில் நடந்து சென்ற முதியவர் மீது பைக் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள தண்ணீர்பந்-தல்காடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன், 32. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஜவ்வரிசி ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, இவர் நாம-கிரிப்பேட்டைக்கு சென்று விட்டு, யமஹா பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது தண்ணீர்பந்தல்காடு பிரிவு ரோடு அருகே இரவு நேரத்தில் நடந்து சென்று கொண்டி-ருந்த, 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மீது எதிர்பாராதவிதமாக பைக் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த முதியவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்-ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். விபத்து சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து முதியவரை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், முதியவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான முதி-யவர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement