டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்-பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வகுப்பு
கள் நடத்தப்படுகின்றன.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், 6,574 காலிப்பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப், -4 தேர்வு அறிவிப்பு கடந்த, 6ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு வரும் நவம்பர், 5ம் தேதி வரை விண்ணப்பிக்-கலாம். இத்தேர்வை எழுதுபவர்களுக்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்-திட்டத்தின்படி நேரடி இலவச பயிற்சி வகுப்பு, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவல-கத்தில் வரும், 15ம் தேதி காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள தேர்வர்கள், 04286-, 222260 என்ற போன் நம்பரிலோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலோ தொடர்பு கொள்-ளலாம். அல்லது நாமக்கல் மாவட்ட வேலை-வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி தங்களது பெயர், முக-வரி மற்றும் போன் நம்பர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம்.நேரடி பயிற்சியில் சேர விரும்பும் மனுதாரர்கள் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். மேலும் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணை-யதள முகவரியில் வீடியோ வழிக் கற்றல் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்-டுள்ளது. இதில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்-ளலாம்.
இதுதவிர, கல்வி 'டிவி' வாயிலாக தினமும் காலை, 7:00 மணி முதல், 9:00 மணி வரையும், மாலை, 7:00 மணி முதல், 9:00 மணி வரையும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி ஒளிபரப்பு செய்-யப்படுகிறது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் யூடியூப் சேனல் மூலமாகவும் பயிற்-சிகள் வழங்கப்படுகிறது.

Advertisement