அரளி பூ விலை உயர்வு
வெண்ணந்துார்; வெண்ணந்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்பரப்பிப்பட்டி, கோம்பைக்காடு, குட்டலா-டம்பட்டி, தேங்கல்பாளையம், அத்தனுார், ஆர்.புதுப்பாளையம், கல்லாங்குளம், கட்டனாச்-சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பர-வலாக அரளி பூ சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் பூக்கள் சேலம், நாமக்கல், ஆத்துார் உள்ளிட்ட பகுதிக-ளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்-றன.
இப்பகுதிகளில் அரளி பூ சாகுபடிக்கு ஏற்ற சூழல் நிலவுவதால், பூக்கள் பெரிய அளவிலும், அதிக வாசனையுடனும் காணப்படுகின்றன. இதனால், வியாபாரிகள் விவசாயத் தோட்டங்களுக்கே நேரடியாகச் சென்று பூக்களை கொள்முதல் செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன் சந்தையில் ஒரு கிலோ அரளி பூ, 80 முதல், 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்-பட்டு வந்தது.
தற்போது நிலவி வரும் வறட்சியின் காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதற்கிடையே, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட விசேஷ தினங்கள் வரவுள்ளதால், பூக்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, நேற்று ஒரு கிலோ அரளி பூ, 160 ரூபாய்-க்கு விற்-பனை செய்யப்பட்டது. கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடுகையில் விலை உயர்ந்துள்ளதால், அரளி பூ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.