யு.பி.ஐ., பண பரிவர்த்தனை மறைமுக வரி விதிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

குமாரபாளையம்; யு.பி.ஐ.,பணப் பரிவர்த்தனையில் மறைமுக வரி விதிப்பதைக் கண்டித்து அதனை ரத்து செய்ய குமாரபாளையம் வணிகர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
நடந்தது.

யு.பி.ஐ.,பணப் பரிவர்த்தனையில் மறைமுக வரி விதிப்பதைக் கண்டித்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும், குமாரபாளையம் அனைத்து வணிகர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன
ஆர்ப்பாட்டம் நடந்தது.
குமாரபாளையம் அனைத்து வணிகர்கள் சங்கத் தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் விடியல் பிரகாஷ், பொருளாளர்
செந்தில் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில்,
யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனை தொடர்பான மறை-முக வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Advertisement