ஆப்ரிக்காவில் கப்பல் கவிழ்ந்து விபத்து; 15 குழந்தைகள் உள்பட 109 பேர் பலி

ஜிபூட்டி: ஆப்பிரிக்காவின் ஹார்ன் பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வாய்ப்புகளைத் தேடி ஜிபூட்டி வழியாகவும், பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியாகவும் வளைகுடா நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர்.

அக்.,8ம் தேதி கிழக்கு ஆப்பிரிக்காவின் ஜிபூட்டியில் இருந்து ஏமனை நோக்கி அருகே புலம்பெயர்ந்த 305 பேர் கப்பலில் பயணம் செய்தனர். அந்தக் கப்பல் நடுக்கடலில் திடீரென கவிழ்ந்தது. இதில், 15 குழந்தைகள் உட்பட 109 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்ததாக சர்வதேச புலம்பெயர்வோருக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. 52 ஆண்களும், 42 பெண்களும், 15 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.

Advertisement