சீமைக்கருவேல மரங்களை அகற்ற மனமில்லை; கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து அபாயம்: அரசின் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்
கீழக்கரை: கீழக்கரையிலிருந்து சாயல்குடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறங்களிலும் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களால் அடிக்கடி அப்பகுதியில் விபத்து நிகழ்கிறது. தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டும் காணாமலும் மெத்தனமாக உள்ளனர்.
சாலையோரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாகவும் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு வழி ஏற்படுத்தியிருந்த பாதைகள் தற்போது சீமை கருவேல மரங்களின் தாக்கத்தால் அடர்ந்து வளர்ந்துள்ளது. கிராமங்களில் உள்ள ஊரக வேலைவாய்ப்பு கிராமப்புற வேலை திட்ட பணியாளர்கள் மூலமாக சாலையோர சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். நெடுஞ்சாலையில் சாலை பணியாளர்கள் மூலமாக குறிப்பிட்ட இடங்களை தேர்வு செய்து சீமை கருவேல மரங்களை அகற்றி விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்த மாவட்ட நிர்வாகம் உரிய வழிகாட்டுதலை வழங்கினாலும், அவற்றை செயல்படுத்த வேண்டிய தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டும் காணாமலும் மெத்தன போக்கை கையாண்டு வருகின்றனர். டூவீலரில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகளின் கைகளை முள்மரங்கள் பதம் பார்க்கிறது, விபத்து அபாயம் உள்ளது. எனவே இவ்விஷயத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
மேலும்
-
இருமொழிக் கொள்கை தான் என்பதில் தவெக உறுதி: அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டம்
-
உச்சநீதிமன்றம் நோக்கி ராகுல் தலைமையில் பேரணி
-
ஸ்கூட்டரில் வைத்த நகை திருட்டு: விழுப்புரத்தில் துணிகரம்
-
வி.சி.க.,வில் நிர்வாகிகள் நியமனம்
-
இரட்டை கொலை இடத்தில் மது அருந்துவோர் அட்டகாசம்: கலெக்டர் அலுவலகத்தில் புகார்
-
மாநில பெண்கள் கபடி போட்டி