ஸ்கூட்டரில் வைத்த நகை திருட்டு: விழுப்புரத்தில் துணிகரம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் துணிக்கடை பார்க்கிங்கில் ஸ்கூட்டர் பெட்டியில் இருந்த 7 சவரன் நகை திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த கப்பியாம்புலியூரைச் சேர்ந்தவர் குழலிதாஸ், 35; இவரது மனைவி அட்சயா, 33; இருவரும் விழுப்புரத்தில் உள்ள வங்கியில் 7 சவரன் தங்க நகையை அடமானம் வைக்க ஸ்கூட்டரில் வந்தனர்.

வங்கியில் நகை மதிப்பீட்டாளர் விடுமுறை என்பதால் அடகு வைக்க முடியாமல் நகையை ஸ்கூட்டர் பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு தனது மனைவியுடன், மதியம் 12:30 மணிக்கு ஜவுளி கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டர் பெட்டியில் வைத்திருந்த 7 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது.

தகவலறிந்தத விழுப்புரம் தாலுகா போலீசார் ஜவுளி கடையில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட ஸ்கூட்டர் பெட்டியின் அடியில் கையைவிட்டு மர்மநபர் ஒருவர் நகையை திருடியது தெரியவந்தது. தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement