இருமொழிக் கொள்கை தான் என்பதில் தவெக உறுதி: அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டம்
சென்னையில் அவர் அளித்த பேட்டி;
தமிழகத்தில் தவெகவை பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை மட்டுமே இருக்க வேண்டும். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தெளிவாகவும் இருக்கிறோம்.
தவெக அரசு தமிழகத்தில் பொறுப்பேற்றபோதே, நிர்வாக ரீதியாக மத்திய அரசுக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்புடன் இருப்போம், மத்திய அரசிடம் இருந்தும் அப்படியே எதிர்பார்ப்பதாகவும் மிக தெளிவாக தெரிவித்து இருந்தோம்.
தமிழக அரசுடன் ஒத்துழைத்துச் செயல்படுவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளது, எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. அதே சமயத்தில் கொள்கை ரீதியாக மாநில உரிமைக்காக நாங்கள் நிச்சயம் குரல் கொடுப்போம்.
இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் பேட்டியளித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீஹாரில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி
-
தலைமை தேர்தல் கமிஷனருக்கு வாழ்நாள் சட்டப் பாதுகாப்பா? மத்திய அரசு, தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் நோட்டீஸ்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
-
சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்
Advertisement
Advertisement