வி.சி.க.,வில் நிர்வாகிகள் நியமனம்

கடலுார்: கடலுாரில் வி.சி., கட்சியின் புதிய நிர்வாகிகள், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

வி.சி., கட்சியின் கடலுார் மண்டல செயலாளராக முல்லைவேந்தன், சட்டசபை தொகுதியின் மாவட்ட செயலாளராக ராமச்சந்திரன், பொருளாளராக பழனிவேல் நியமிக்கப்பட்டனர். இவர்கள் துணை மேயர் தாமரைச்செல்வன், மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன் தலைமையில், கடலுாரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். முன்னாள் மாவட்ட செயலாளர்கள் அறிவுடைநம்பி, செந்தில், மாவட்ட செய்தி தொடர்பாளர் கிருஷ்ணா, மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், ராமநாதன், நித்யா, மகி, ஜெயா சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement