குதிரை, மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை: காளையார்கோவிலில் குதிரை, மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 12 குதிரை, 45 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. மதுரை -– தொண்டி ரோட்டில் போட்டி நடந்தது. குதிரை வண்டி 8 கி.மீ., துாரமும், பெரிய மாடு பிரிவிற்கு 7 கி.மீ., சிறிய மாடு பிரிவுக்கு 6 கி.மீ., துாரம் என நிர்ணயித்து போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டில் முதல் 4 இடங்களை பிடித்த வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கினர்.

Advertisement