உலக மனநல தினத்தை முன்னிட்டுகடலுாரில் விழிப்புணர்வு பேரணி

கடலுார்: கடலுாரில் உலக மனநல தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

மனநலம் மற்றும் மனநோய்க்கு உண்டான சிகிச்சை முறைகள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மனநல விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. மனநோய்க்கு மருந்து உண்டு, முற்றிலும் குணப்படுத்தக் கூடியவை, மொத்த மக்கள் தொகையில் 1 சதவிகிதம் தீவிர மன நோயினாலும், 10-15 சதவிகிதம் மற்ற நோய்களினாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என, மனநல ஆராய்ச்சிகள் கணித்துள்ளது.

சமுதாய விழிப்புணர்வு மற்றும் கல்வி மூலம் மனநோய் பற்றிய தவறான எண்ணங்களை மாற்றி, மனநோய் மீதுள்ள மூடநம்பிக்கைகள் மற்றும் தவறான எண்ணங்களை அகற்றுவதற்காக விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுவதாக அதிகாரிகள் விளக்கி பேசினர். இந்நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ., சுந்தரராஜன், சுகாதார அலுவலர் ராஜா, மருத்துவமனை கண்காணிப்பாளர் தம்மையா, மனநல திட்ட அலுவலர் சத்தியமூர்த்தி, மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement