நவம்பரில் மதுரை புத்தகத் திருவிழா: நவ.13 முதல் நடத்த திட்டம்
மதுரை: மதுரை மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நவ.13 முதல் பத்து நாட்களுக்கு நடக்க உள்ளது.
தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பரில் மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெறும். பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் நடைபெறும் இவ்விழாவில், நுாற்றுக்கணக்கான புத்தக பதிப்பாளர்கள் தங்கள் ஸ்டால்களை இடம்பெறச் செய்வர். தினமும் கருத்தரங்கு, இலக்கிய நிகழ்ச்சிகள், பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும்.
புதிய அரசு பொறுப்பேற்ற பின் அரசாணை வெளியாவது தாமதமானதால் நவம்பருக்கு தள்ளிப் போனது. சமீபத்தில் வெளியான அரசாணையைத் தொடர்ந்து நேற்று மாவட்ட நிர்வாகம் புத்தகத் திருவிழா நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தியது.
கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, டி.ஆர்.ஓ., அன்பழகன், புத்தகப் பதிப்பாளர்கள் சங்க (பபாசி) நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் நவ.13 முதல் 23 வரை நடத்த வாய்ப்புள்ளது குறித்து ஆலோசித்துள்ளனர்.
மேலும்
-
பொங்கலுக்கு தரமான இலவச வேஷ்டி சேலை: கோவையில் அமைச்சர் விஜய் பாலாஜி உறுதி
-
சரக்கு வாகனம் கவிழ்ந்து கல்லுாரி மாணவர் பலி
-
சிவா டெக்ஸ்டைல்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை
-
சிகிச்சை பலனின்றி யானை உயிரிழப்பு
-
வாழ்க்கை பயணத்துக்கு ‘பிரேக்’ போட்டு விட்டது அரசு: தனியார் பஸ் உரிமையாளர்கள் குமுறல்
-
ஆன்லைன் ‘டிரேடிங்’ பயிற்சி மோசடி ரூ.6 கோடி சுருட்டிய நண்பர்கள் கைது