செவன்த் டே பள்ளியில் அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி: மரப்பாலம் செவன்த் டே அட்வெண்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

பள்ளிகளின் இயக்குநரும், முதல்வருமான ஸ்பர்ஜன் சுகுமார் வரவேற்றார். தலைமை ஆசிரியர் புண்ணியராஜ் இறைவணக்கம் வாசித்தார். பொருளாளர் ஜில்பர்ட் ஜோசப் நன்றி கூறினார்.

ஜான்குமார் எம்.எல்.ஏ., அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து, பார்வையிட்டார். புதுச்சேரி அன்சாரி துரைசாமி அரசு மேல்நிலைப் பள்ளியின் விரிவுரையாளர் மணிகண்டன், அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியின் விரிவுரையாளர் ஹேமலதா, வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சபரிநாதன், முத்தியால்பேட்டை அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் ரேவதி ஆகியோர் மாணவர்களின் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.

கண்காட்சியில், மரப்பாலம் செவன்த் டே அட்வெண்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளி, மரப்பாலம் ஐ.சி.எஸ்.இ., செவன்த் டே அட்வெண்டிஸ்ட் பள்ளி, ஓயிட் டவுன் செவன்த் டே அட்வெண்டிஸ்ட் உயர்நிலைப் பள்ளி என மூன்று பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் 270க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

அதில், 60க்கும் மேற்பட்ட சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர், ஐ.சி.எஸ்.இ., பள்ளியின் பொறுப்பாளர்கள், அறிவியல் துறை ஆசிரியர் குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement