மேலாளரை கத்தியால் குத்திய டிரைவர், கண்டக்டர் கைது
தஞ்சாவூர்: கும்பகோணத்தில், பணியிட மாற்றம் செய்ததற்காக, அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளரை கத்தியால் குத்திய டிரைவர் செந்தமிழ் செல்வன், 45, அவருக்கு உடந்தையாக இருந்த கண்டக்டர் பிரதாப், 45, ஆகிய இவரையும் போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்தவர் சுரேஷ், 58. அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர். இதே கிளையில், மேலமாத்துாரை சேர்ந்த செந்தமிழ்செல்வன் டிரைவராக வேலை பார்க்கிறார். முறையாக பணிக்கு வராததால், சில நாட்களுக்கு முன், செந்தமிழ்செல்வன், கும்பகோணத்தில் இருந்து காரைக்குடிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், கும்பகோணம் கிளை அலுவலகத்திற்கு வந்த செந்தமிழ்செல்வன், சுரேஷிடம் தகராறு செய்து, அவரை கத்தியால் குத்தி தப்பினார். இது குறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தமிழ்செல்வன், அவருக்கு உடந்தையாக இருந்த கண்டக்டர் பிரதாப் இருவரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
மேலும்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
-
சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்
-
விவசாயி வீட்டில் 7 பவுன் நகை திருடிய 5 பேர் கைது
-
கலெக்டர் உத்தரவில் டாக்டர் 'சஸ்பெண்ட்'