மாணவருக்கு மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் உளவியல் இளங்கலை துறை சார்பில் மூன்று நாள் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சியின் இரண்டாம் நாளில் 'இளம்பருவ மனநலம்' என்ற தலைப்பில் போஸ்டர் வினியோக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

துறைத் தலைவர் கயல்விழி, ஒருங்கிணைப்பாளர் நான்சி அனுக்கா செபாஸ்டி, உதவி பேராசிரியைகள் சிமோனா, அமர்தா, சுதர்ஷனா, பாலஅபிராமி, சித்தார்தினி, மாணவ ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.

இளம்பருவ மனநலம் விழிப்புணர்வு குறித்த போஸ்டர்கள் துணை முதல்வர் சாமுவேல் அன்புச்செல்வனிடம் வழங்கப்பட்டது. அவை அனைத்து துறைகளிலும் காட்சிப்படுத்தப்பட்டன. வளாகத்தின் பல்வேறு இடங்களிலும் போஸ்டர்களை நிறுவியதுடன், கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் நடந்தன.

Advertisement