ரஷ்யா - உக்ரைன் போரில் உடன்பாடு; அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்ந்து நீண்டு கொண்டே வருகிறது. இருநாடுகளும் மாறி மாறி தாக்குதலை நடத்தி வருகின்றன. குறிப்பாக, ரஷ்யாவில் உள்ள எரிசக்தி நிலையங்கள், எண்ணெய் உள்கட்டமைப்புகளை உக்ரைன் குறிவைத்து தாக்கி வருகிறது. இதனால், சர்வதேச நாடுகளுக்கான ரஷ்யாவின் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைனின் மின் மற்றும் ஆற்றல் எரிசக்தி நிலையங்கள் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்தினால், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலை நிறுத்துவோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி வந்தார்.
தற்போது, எரிசக்தி நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதலை நிறுத்துவது தொடர்பாக ரஷ்யா, உக்ரைன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இதனை யாரும் மீறக் கூடாது என்றும் அவர் கண்டிப்புடன் கூறியுள்ளார்.
மேலும்
-
இந்திய அணி 223 ரன் குவிப்பு; அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷான் அதிரடி
-
நேபாளத்தில் மீண்டும் கடும் வெள்ளப் பெருக்கு; 30 வீடுகள், பாலங்கள் சேதம்
-
மாற்றத்தை பெண்கள் ஏற்படுத்த வேண்டும்: அண்ணாமலை வேண்டுகோள்
-
வக்கீல் கொலை முயற்சி வழக்கு: 3 பேர் கைது
-
ஆன்லைன் மோசடி விவகாரம்: எட்டு முதலீட்டாளர்கள் கைது
-
நாச்சம்மாள் வித்யவாணி பள்ளியில் நவராத்திரி கொலு, கலை விழா