ஆன்லைன் மோசடி விவகாரம்: எட்டு முதலீட்டாளர்கள் கைது
மதுரை: மதுரையில் ஆன்லைன் மோசடி தொடர்பாக பெண் ஏஜன்டை மிரட்டியதாக 8 முதலீட்டாளர்களை போலீசார் கைது செய்தனர்.
'எப்.கியூ.எல்.,' 'விஜி' என்ற இரண்டு ஆன்லைன் செயலிகள் மூலம் 'கிரிப்டோ கரன்ஸி' வர்த்தகம் என்ற பெயரில் மக்களிடம் பணத்தை பெற்று கோடிக் கணக்கிலான ரூபாய் மோசடி நடந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்டோர் கொடுத்த புகாரில் மேலுார் கட்டயம்பட்டி ரஞ்சித், அவரது மனைவி பிரியதர்ஷினி உட்பட சிலர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்தனர். ரஞ்சித், பிரியதர்ஷினி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மதுரை பொருளாதார குற்றத் தடுப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த மோசடியில் சிவகங்கை கிளாதரியை சேர்ந்த எட்டு முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தங்களுக்கு ஏஜென்டாக செயல்பட்ட மேலுார் கோட்டநத்தம்பட்டி மூக்கம்மாளிடம் இழந்த தொகையை கேட்டனர். மூக்கம்மாளின் மருமகனை வரிச்சியூர் பகுதிக்கு சட்ட விரோதமாக அழைத்துச் சென்று 8 பேரும் முதலீட்டு தொகையான ரூ.25 லட்சத்தை கேட்டு மிரட்டினர்.
கருப்பாயூரணி இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் மூக்கம்மாள், அவரது மருமகனை மீட்டனர். பணத்தை கேட்டு மிரட்டிய கிளாதரி ரமேஷ் 30, மதயானை 28, கணேசன் 40, அருண் 26, நொண்டிசாமி 33, அருண்பாண்டி 28, அருண்ராஜ் 30, கலைப்பிரகாஷ் 27, ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
மேலும்
-
இந்திய அணி 223 ரன் குவிப்பு; அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷான் அதிரடி
-
நேபாளத்தில் மீண்டும் கடும் வெள்ளப் பெருக்கு; 30 வீடுகள், பாலங்கள் சேதம்
-
மாற்றத்தை பெண்கள் ஏற்படுத்த வேண்டும்: அண்ணாமலை வேண்டுகோள்
-
ரஷ்யா - உக்ரைன் போரில் உடன்பாடு; அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
-
வக்கீல் கொலை முயற்சி வழக்கு: 3 பேர் கைது
-
நாச்சம்மாள் வித்யவாணி பள்ளியில் நவராத்திரி கொலு, கலை விழா